தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சுற்றுப்புறக் கட்டடத்தில் முடக்கநிலை 

ஆபத்தான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை: கிரேஸ் ஃபூ

1 mins read
762b711e-1c0a-48c7-8af8-e2112af3be09
கட்டடத்தில் வேலை செய்வோர் விருப்பப்பட்டால் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்காட்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சுற்றுப்புறக் கட்டடம் ‘பாதுகாப்பு சார்ந்த சூழலால்’ புதன்கிழமை முடக்கப்பட்டது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை அந்தக் கட்டடத்தில் அமைந்துள்ளன.

இதுபற்றி புதன்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, “லாவோசின் வியன்டியன் நகரில் ஆசியான் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும்போது, சுற்றுப்புறக் கட்டடத்தில் ‘பாதுகாப்பு சார்ந்த சூழல்’ நிலவுவதாக எனக்குச் செய்தி கிடைத்தது.

“காவல்துறையினரும் பாதுகாவல் அதிகாரிகளும் நடத்திய முன்னோட்டச் சோதனையில் ஆபத்தான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் இங்கிருந்தபடியே நிலைமையைக் கண்காணித்து வருகிறேன்,” என்று கூறினார்.

கட்டடத்திலிருந்து மக்கள் வெளியேறும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு பகல் ஒரு மணியளவில் அங்கு சென்றடைந்தபோது, முதல் மாடியில் ஒருசிலர் மட்டும் காணப்பட்டனர். மின்தூக்கி முகப்புக்கு இட்டுச்செல்லும் பாதையில் ‘அவசர நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்டடம் முடக்கநிலையில் உள்ளது’ என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.

கட்டடத்தில் அவசரநிலை ஏற்பட்டிருப்பதாகக் காலை பத்து மணியளவில் கட்டட நிர்வாகத்திடமிருந்து மின்னஞ்சல் கிடைத்ததாக அங்கு வேலை செய்யும் ஒருவர் தெரிவித்தார். கட்டடத்தில் வேலை செய்வோர் விருப்பப்பட்டால் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்