ஹாபர்ஃபிரண்ட் சென்டர் கடைத்தொகுதியில் உள்ள மின்படிக்கட்டில் குழந்தைத் தள்ளுவண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டதை அடுத்து, மின்படிகள் சேதமடைந்தன.
மின்படிக்கட்டின் படிகள் பெயர்ந்துகொண்டு வெளிவந்தன.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நிகழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் காயமின்றித் தப்பினர்.
குழந்தைத் தள்ளுவண்டியின் சக்கரங்கள் மின்படிக்கட்டில் மாட்டிக்கொண்டதாகவும் அதை விடுவிக்க அப்பெண் தள்ளுவண்டியை இழுத்தபோது படிகள் பெயர்ந்துகொண்டு வெளிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மின்படிக்கட்டு முடங்கியது
ஹாபர்ஃபிரண்ட் சென்டர் கடைத்தொகுதியில் உள்ள மின்படிக்கட்டு கட்டடம், கட்டுமான ஆணையத்தின் தரநிலைக்கு உட்பட்டு மாதந்தோறும் பராமரிக்கப்படுவதாக ஹாபர்ஃபிரண்ட் சென்டர் கடைத்தொகுதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மின்தூக்கியைப் பயன்படுத்துமாறு குழந்தைத் தள்ளுவண்டியுடன் கடைத்தொகுதிக்கு வருபவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.