சிங்கப்பூரில் கால்பதிக்கத் திட்டமிடும் ஐரோப்பிய, வடக்கு ஆசிய நிறுவனங்கள்

சிங்கப்பூரில் கால்பதிக்கத் திட்டமிடும் ஐரோப்பிய, வடக்கு ஆசிய நிறுவனங்கள்

1 mins read
0c082a0b-b9b1-44e3-8a82-371a17436cd6
சிங்கப்பூரின் 2025ஆம் ஆண்டின் பொருளியலில் உற்பத்தித் துறைக்கு மிகப் பெரிய பங்கு இருந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐரோப்பிய, வடக்கு ஆசியாவின் பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் கால்பதிப்பதன் மூலம் தென்கிழக்காசியாவில் அவற்றின் தொழிலை மேம்படுத்த முடியும் என்று அவை நம்புகின்றன.

உள்ளூர் நிறுவனங்களுடன் வெளிநாட்டு நிறுவனங்கள் பல ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சிங்கப்பூர் உற்பத்தி கூட்டமைப்புத் தெரிவித்தது.

வட்டார அளவில் வளர்ச்சி பெறவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

இருப்பினும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கைகள் நிறுவனங்களுக்குப் பெரிய கவலையாக உள்ளது என்று கூட்டமைப்பு குறிப்பிட்டது.

போட்டித்தன்மையுடன் சிறப்பாகச் செயல்படவும் கடினமானக் காலகட்டத்தில் வழிநடத்தவும் ஆதரவு தேவைப்படுவதாகக் கூட்டமைப்புத் தெரிவித்தது.

சிங்கப்பூரின் 2025ஆம் ஆண்டின் பொருளியலில் உற்பத்தித் துறைக்கு மிகப் பெரிய பங்கு இருந்ததாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) கூறியது.

மின்னணுப் பொருள்கள்,இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவற்றின் தேவை அதிகமாக இருப்பதால் உற்பத்தித்துறை சிறந்து விளங்குகிறது. அதேபோல் தற்போது செயற்கை நுண்ணறிவு சார்ந்த மின்னணுப் பொருள்களுக்கும் தேவை அதிகமாகியுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்