ஜூலை மாதம் வெப்பமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் இடியுடன் மழை

ஜூலை மாதம் வெப்பமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் இடியுடன் மழை

1 mins read
bf0b1072-a2f9-40ff-abd4-f9d7f1424d0e
தீவு முழுவதும் ஓரிரு நாள்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வகம் எதிர்பார்க்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஜூலை மாதத்தின் இரண்டாம் பாதியில் பல நாள்கள் முற்பகலிலும் மதிய வேளையிலும் சிறிது நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தீவு முழுவதும் ஓரிரு நாள்களில் பெருமழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் அதன் வானிலை அறிக்கையில் ஆய்வு நிலையம் வியாழக்கிழமை (ஜூலை 16) குறிப்பிட்டது.

பகல் நேரத்தில் அன்றாட வெப்பநிலை சில நாள்களில் 34 டிகிரி செல்சியசைக் கடக்கும் எனவும் சில இரவுகள் வெப்பமாகவே இருக்கும் எனவும் ஆய்வு நிலையம் தெரிவித்தது.

தற்போது தென்மேற்குப் பருவமழை சிங்கப்பூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் தொடரும். பல நாள்களில் தாழ்வான அளவில் தென்கிழக்கு, அல்லது தென்மேற்குத் திசைகளில் இருந்து காற்று வீசும் எனவும் ஆய்வு நிலையம் அறிக்கையில் கூறியது.

இக்காலக்கட்டத்தில் ஓரிரு நாள்களில் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவிலிருந்து எழும் சூறாவளிக் காற்று சிங்கப்பூரை அடைந்து, அதிகாலையில் பலத்த காற்று வீசுவதோடு இடியுடன் மழையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

மாதத்தின் மொத்த மழையின் அளவு வழக்கப்போல் இருக்கும் என்று ஆய்வு நிலையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்