தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் நல்ல தொடக்கம் பெற தகுதியானவர்: பிரதமர் வோங்

3 mins read
ace02d1e-c132-4787-a6e2-462c4aee2a25
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் வோங், திரு தினேஷ் வாசுவுடன் நிகழ்ச்சிக்கு வந்த பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறார். - படம்: த. கவி

ஒவ்வொரு பிள்ளையும் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தையும், தனக்கே உரிய தனித்துவமான வழியில் மிளிர ஒரு வாய்ப்பையும் பெறத் தகுதியானவர் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார்.

டௌன்டவுன் ஈஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற ‘பிக் ஹார்ட் மாணவர் பராமரிப்பு’ லாப நோக்கற்ற அமைப்பின் 10வது ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திரு வோங் சிறப்புரையாற்றினார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் உள்ள நான்கு சுயஉதவி அமைப்புகளான சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேசியர் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கம் (சிண்டா), மெண்டாக்கி ஆகியவை இணைந்து கல்வி அமைச்சுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதன்மூலம் அனைத்து இன மாணவர்களுக்கும் சேவை செய்யும் வகையில் பள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட 30 மாணவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கின.

நான்கு சுயஉதவிக் குழுக்களின் கூட்டுமுயற்சியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது பள்ளி மாணவர்கள், குறிப்பாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு சிறப்பாக உதவ வழியமைத்து வருகிறது.

தற்போதைய மொத்த மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட 5,600ஆக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 17,000க்கும் அதிகமான மாணவர்கள் ‘பிக் ஹார்ட்’ அமைப்பின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

நிதி அமைச்சருமான திரு வோங், மாணவர்களின் பள்ளி நேரத்திற்குப் பிந்திய பராமரிப்பு நிராகரிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.

“பள்ளி நேரத்திற்குப் பிறகு பிள்ளைகள் எங்கு, எப்படி நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பது அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பள்ளி நேரத்திற்குப் பிந்திய நேரம் பிள்ளைகள் பண்பு, சமூகத் திறன்கள், புதிய ஆர்வங்களை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பு,” என்று திரு வோங் குறிப்பிட்டார்.

இதனால், அரசாங்கம் அதில் அதிக முதலீடு செய்து பள்ளி நேரத்திற்குப் பிந்திய பராமரிப்பை விரிவுபடுத்த பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் வோங் கூறினார்.

தமது உரையின்போது நான்கு சுயஉதவி அமைப்புகளையும் பாராட்டிய அவர், சமூகங்களைத் தூக்கி நிறுத்துவதில் அமைப்புகள் முக்கியப் பங்காற்றியுள்ளதாகச் சொன்னார்.

பிரதமர் வோங்குடன் பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில், மூத்த துணை அமைச்சரும், சுயஉதவி அமைப்புகளின் மாணவர் பராமரிப்புக்கான தலைவருமான லோ யென் லிங், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பிரதமர் வோங்குடன் பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில், மூத்த துணை அமைச்சரும், சுயஉதவி அமைப்புகளின் மாணவர் பராமரிப்புக்கான தலைவர் லோ யென் லிங், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சுயஉதவி அமைப்புகளின் முக்கியப் பேராளர்கள் ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் வோங்குடன் பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், உள்துறைக்கான மூத்த துணை அமைச்சருமான முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், கலாசார, சமூக, இளையர்துறை, வர்த்தக, தொழில், மூத்த துணை அமைச்சரும், சுயஉதவி அமைப்புகளின் மாணவர் பராமரிப்புக்கான தலைவர் லோ யென் லிங், கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவள துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், சுயஉதவி அமைப்புகளின் முக்கியப் பேராளர்கள் ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். - படம்: த. கவி

சுயஉதவி அமைப்புகளின் முக்கியப் பேராளர்களுடன் சிங்கப்பூர் முழுவதுமிருந்தும் கிட்டத்தட்ட 4,300 மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு லாப நோக்கற்ற அமைப்பின் தலைவர் லோ யென் லிங் தமது உரையின்போது அமைப்பின் அடுத்தகட்ட வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

புரோஜெக்ட் பிலேகுவெஸ்ட்

தற்போது செயல்பாட்டில் இருக்கும் புரோஜெக்ட் பிலேகுவெஸ்ட் திட்டம், விளையாட்டு அடிப்படையிலான கற்றல்வழி எழுத்தறிவு, எண்ணறிவைப் புகட்டி, குழந்தைகளின் ஆர்வம், தன்னம்பிக்கை, கற்பனைத்திறனை வளர்த்து வருகிறது. தற்போது ஏழு மையங்களில் முன்னோட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், 2026க்குள் ‘பிக் ஹார்ட்’ அமைப்பின் 30 மையங்களுக்கும் விரிவுகாணும். அப்போது 5,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பயன்பெறலாம்.

அதிக தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு

கல்வி அமைச்சுடன் இணைந்து மாணவர்கள் சமூக, உணர்ச்சித் திறன்களை வலுப்படுத்தவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், நல்லுறவுகளை உருவாக்கவும் இத்திட்டத்தின் கீழ் வழிகாட்டப்படுவர். அவர்கள் நடனம், கலை, இசை அல்லது விளையாட்டு போன்ற வகுப்பறைக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை ஆராயவும் வாய்ப்புகள் பெறுவர்.

செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி லோ, ‘நாம்’ என்ற உணர்வுடன் பிள்ளைகளையும், அவர்களின் குடும்பங்களையும் தூக்கி நிறுத்த ‘பிக் ஹார்ட்’ கடப்பாடு கொண்டிருக்கும் என்றார்.

“என் மகன் முன்னர் ‘பிக் ஹார்ட்’ மாணவர் பராமரிப்பு நிலையம் மூலம் பயன்பெற்றார். வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, அவர் கல்வியில் சிறந்து விளங்கத் தொடங்கினார். பிள்ளைகளுடன் பழகுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது என அவர் பல நல்ல மாற்றங்களைக் கண்டார்,” என்றார் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்களில் ஒருவரான திருவாட்டி சசிகலாவதி, 50.

சுயஉதவி அமைப்புகளின் முக்கியப் பேராளர்களுடன் சிங்கப்பூர் முழுவதுமிருந்தும் கிட்டத்தட்ட 4,300 மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிக் ஹார்ட் மாணவர் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுயஉதவி அமைப்புகளின் முக்கியப் பேராளர்களுடன் சிங்கப்பூர் முழுவதுமிருந்தும் கிட்டத்தட்ட 4,300 மாணவர்கள், குடும்ப உறுப்பினர்கள், பிக் ஹார்ட் மாணவர் பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரும் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். - படம்: த. கவி
குறிப்புச் சொற்கள்