சைக்கிளோட்டியுடன் விபத்து: முன்னாள் நடிகர் மீது குற்றச்சாட்டு

1 mins read
da484345-43fc-47c6-b8fa-f710c9c597c9
அரசு நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நடிகர் இங் அய்க் லியோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சைக்கிளோட்டி ஒருவருடன் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் வாகனம் ஓட்டியதாக முன்னாள் நடிகர் இங் அய்க் லியோங் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2023 செப்டம்பர் 20ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் 27 வயது ஆண் சைக்கிளோட்டி மீது வேனை மோதி இங் அவருக்குக் கடும் காயம் விளைவித்தார் நம்பப்படுவதாக நீதிமன்றத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) தெரிவிக்கப்பட்டது.

கேவனா சாலையிலிருந்து சிராங்கூன் சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா சாலைக்குள் 63 வயது இங் வேனை திருப்பியபோது விபத்து நிகழ்ந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது.

அந்த சைக்கிளோட்டியின் காயங்கள் குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

$10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இங், நவம்பர் 15ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்