பிணையில் வெளிவந்துள்ள ஆகாயப் படை முன்னாள் தலைவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

பிணையில் வெளிவந்துள்ள ஆகாயப் படை முன்னாள் தலைவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி

1 mins read
2f4a1437-0a96-4adf-86c6-dc201ace3161
ஆகாயப் படையின் முன்னாள் தலைவர் கோ யோங் சியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2024ஆம் ஆண்டில் குழந்தைத் தள்ளுவண்டியுடன் இருந்த மாதை காரால் மோதியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆகாயப் படையின் முன்னாள் தலைவருக்கு, இந்தோனீசியாவுக்கும் தாய்லாந்துக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மே 19 முதல் 22ஆம் தேதி வரை வேலை நிமித்தமாக ஜகார்த்தாவுக்குப் பயணம் மேற்கொள்ள கோ யோங் சியாங், 74, என்ற அந்த ஆடவருக்கு வட்டார நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதோடு, வரும் ஜூன் 3 முதல் 6ஆம் தேதி வரை வேலை தொடர்பான விவகாரங்களுக்காக பேங்காக் செல்வதற்கும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பிணையில் வெளிவந்துள்ள அவர், அதன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக, விசாரணை அதிகாரியுடன் எந்நேரமும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கவேண்டும்.

அதோடு, வெளிநாட்டிலிருந்து வந்த 24 மணி நேரத்திற்குள் அவர் விசாரணை அதிகாரியிடம் கடப்பிதழை ஒப்படைக்கவேண்டும். கூடுதலாக, $5,000 பிணைத் தொகை செலுத்தவேண்டும்.

கடந்த 2024ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி, பாசிர் பாஞ்சாங் சாலையில் சென்றுகொண்டிருந்த மாது ஒருவரை கோ காரால் மோதினார். அந்த மாது குழந்தைத் தள்ளுவண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தார். மாதுக்குக் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில், அவரது இரண்டு வயது மகனுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, கோ சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப் படையில் போர் விமானியாக இருந்தார் என்றும் தற்போது தனது தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்றும் தெமாசெக் நிர்வாகச் சேவைகள் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1998ஆம் ஆண்டில் ஆகாயப் படையின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.

குறிப்புச் சொற்கள்