தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முன்னாள் அதிகாரி நாட்டை விட்டு வெளியேற அனுமதி

1 mins read
e9b3e0a7-db59-49ec-8c55-07e464b27174
வெள்ளிக்கிழமை முதல் செப்டம்பர் 18ஆம் தேதிவரை வேலை காரணமாக தாய்லாந்துக்கும் ஹாங்காங்கிற்கும் செல்ல, பால் லிம் சூன் வுயிக்கு அனுமதி வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மானபங்கக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் தங்ளின் காவல்துறைப் பிரிவின் முன்னாள் அதிகாரி சிங்கப்பூரைவிட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று அவர்மீது மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

புக்கிட் மேராவில் 25 வயது மாது ஒருவரின் இடது பிட்டத்தைத் தொட்டதாக 52 வயது பால் லிம் சூன் வுயிமீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்தச் சம்பவம் ஜூலை 7ஆம் தேதி இரவு 9 மணி அளவில் நடந்தது. குற்றம் நடந்த நேரத்தில், அவர் காவல்துறையிலிருந்து விலகிவிட்டார்.

புதன்கிழமை நடந்த வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) முதல் செப்டம்பர் 18ஆம் தேதிவரை வேலை காரணமாக தாய்லாந்துக்கும் ஹாங்காங்கிற்கும் செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர் தற்போது ஃபிடிலியம் குழுமம், லிவின்வோல் உள்ளிட்ட நிறுவனங்களின் இயக்குநராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

லிம் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்