முன்னாள் தூதரின் அரசாங்க விருதுகள் பறிப்பு

முன்னாள் தூதரின் அரசாங்க விருதுகள் பறிப்பு

1 mins read
9c007ab0-41f1-4f32-a2e7-b4252f641f75
சிம் சியோங் சியே. - படம்: இன்ஸ்டகிராம்/ ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்

முன்னாள் தூதர் ஒருவரின் அரசாங்க விருதுகள் பறிக்கப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டில் தோக்கியோவில் உள்ள பொது குளியல் அறையில் சிறுவனை ரகசியமாகப் படம்பிடித்த சம்பவத்தில் கிறிஸ்டோஃபர் சிம் சியோங் சியே குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 2ஆம் தேதி அவரை வெளியுறவு அமைச்சு வேலையிலிருந்து நீக்கியது.

இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 மீள்தன்மை, நீண்ட காலச் சேவை ஆகிய இரண்டு விருதுகளும் ஏப்ரல் 14ஆம் தேதி பறிக்கப்பட்டன.

சிம், 56 ஜப்பானில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

2024 பிப்ரவரி 27ஆம் தேதி பொது குளியல் அறையில் சிறுவன் ஒருவன் உடையை மாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தனது கைப்பேசியில் படம்பிடித்து சிக்கிக் கொண்டார்.

அவருடைய கைப்பேசியில் இதே போன்று குளியல் அறையில் நிர்வாணமாகப் படம்பிடித்த படங்கள் இருந்தன.

ஜப்பானிய விசாரணையாளர்களிடம் சிம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ஆனால் தூதரக தகுதியில் இருந்ததால் அவரை ஜப்பானிய காவல்துறையால் தடுத்து வைக்க முடியவில்லை.

2024 ஏப்ரல் மத்தியில் சிங்கப்பூர் திரும்பிய சிம்மிடம் வெளியுறவு அமைச்சு விசாரணை நடத்தி அவரை விசாரணையில் உதவுவதற்காக தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கியது.

மறுநாள் தோக்கியோ நகர காவல்துறை, அவரை ஜப்பானுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டது.

இதையடுத்து 2024 ஜூன் 9ஆம் தேதி ஜப்பான் திரும்பிய அவரிடம் ஜப்பானிய அதிகாரிகள் விசாரணை நடத்தி 300,000 யென் (S$2.740) அபராதம் விதித்தனர்.

குறிப்புச் சொற்கள்