தனது மூன்று கட்சிகாரர்களின் பணத்தைக் கையாடல் செய்ததாக முன்னாள் மூத்த வழக்கறிஞரான குர்தாப் சிங் பாலா சிங் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2011க்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் இந்தக் குற்றத்தைப் புரிந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ‘குர்தாயிப் சியோங் & பார்ட்னர்ஸ்’ என்னும் நிறுவனத்தின் வழக்கறிஞராக இருந்தார்.
2018ஆம் ஆண்டு வழக்கறிஞராக செயல்பட அவருக்குத் தடைவிதிக்கப்பட்டது.இருப்பினும் அவர் அடுத்த ஆண்டே ஒருவருக்கு வழக்கறிஞராகச் செயல்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
70 வயதான சிங், தன் மீது கிட்டத்தட்ட $459,000 நம்பிக்கை மோசடி செய்ததாக சுமத்தப்பட்டிருந்த இரண்டுக் குற்றச்சாட்டையும் சட்டத்தொழில் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட ஒரு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.
மூன்றாவது குற்றச்சாட்டு $21,000 நம்பிக்கை மோசடி செய்தது. இந்தக் குற்றச்சாட்டு தண்டனையின் போது பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கிற்கானத் தீர்ப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.