தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் காவல்துறை அதிகாரி $2,000 கையாடல் செய்ததாகச் சந்தேகம்

1 mins read
ab7fe9c3-ac0e-44d3-ab1f-2a90895299b5
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அம்சத் மார்ச் மாதம் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: பிக்சாபே

பணியில் இருந்தபோது முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர், இருவேறு சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட $2,000 பணத்தைக் கையாடல் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய 24 வயது முகம்மது அம்சத் கான் அபு அயுபுல் அன்சாரி, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாகச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது, அரசாங்க அதிகாரியாக இருந்தபோது நம்பிக்கை மோசடி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) அம்சத்மீது சுமத்தப்பட்டன.

அரசாங்கப் பணியிலிருந்து அம்சத் கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி விலகினார் என்றும் அவர் பணியில் இருந்தபோது கையாடல் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தவுடன் அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) கூறியது.

தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அம்சத் மார்ச் மாதம் ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்