பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெண் ஒருவரின் மானத்துக்குப் பங்கம் விளைவித்த சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டிலிருந்து சிங்கப்பூர் ஐடல் முன்னாள் நடுவர் கென் லிம், 60, விடுவிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவர் Hype Records எனும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
2012 ஜூலை 25ஆம் தேதி, ஹெண்டர்சன் சாலையில் இருந்த Hype Records வளாகத்தில் அந்த மாதிடம் பாலியல் ரீதியாக தகாத வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வழக்கு விசாரணைக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் லிம் குற்றவாளி இல்லை என மாவட்ட நீதிபதி வோங் பெக் புதன்கிழமை (டிசம்பர் 11) தீர்ப்பளித்தார்.
நீதிமன்ற உத்தரவால் அந்த மாது குறித்து விவரங்களை வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
புகார் அளித்தவர் நம்பகமான சாட்சி இல்லை என்றும் தமது ஆதாரங்களை அவர் அலங்கரித்தார் என்றும் நீதிபதி வோங் கூறினார்.
தமது பாடலிலும் பாட்டு எழுதுவதிலும் லிம்மின் விமர்சனங்களால் தாம் பாதிக்கப்பட்டதால், லிம்முக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் அந்த மாதுக்கு நோக்கம் இருந்ததை நீதிபதி கண்டறிந்தார்.
இந்நிலையில், மேலும் நான்கு மாதர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஆறு வேறு குற்றச்சாட்டுகளை லிம் தற்போது எதிர்நோக்குகிறார்.
அவர்களில் மூவரின் மானத்துக்கு லிம் பங்கம் விளைவித்ததாகக் கூறப்படுகிறது. 2021 நவம்பர் 23ஆம் தேதி, Hype Records அலுவலகத்தில் மாது ஒருவரை லிம் மானபங்கம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வழக்குகள் பிந்திய ஒரு தேதியில் விசாரணைக்கு வரும்.