தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருப்பில் உள்ள நோவாவேக்ஸ் தடுப்பூசிகள் டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகின்றன

1 mins read
397fa6a3-7328-403e-be29-c5aee541368f
நோவாவேக்ஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவோர் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் போட்டுவிட வேண்டும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரில் இருப்பில் உள்ள நோவாவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசிகள் இம்மாதம் 31ஆம் தேதியுடன் காலாவதியாகின்றன.

அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள விரும்புவோர் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் போட்டுவிட வேண்டும்.

தற்போது இருப்பில் உள்ள நோவாவேக்ஸ் தடுப்பூசிகள் இனி உற்பத்தி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

மாறாக, மேம்படுத்தப்பட்ட நோவாவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் பெறும் பணிகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது.

கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர், ஆகக் கடைசியாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது ஐந்து மாதங்கள் அல்லது ஓராண்டு கழித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.

புதிய, மேம்படுத்தப்பட்ட  JN.1 எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களில் போடப்படும்.

ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி,மொடர்னா/ஸ்பைக்வாக்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.

நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் சிங்கப்பூரெங்கும் சேவையாற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்