வரித் திட்டம் விரிவாக்கம்; கட்டுமானத்துறைக்குக் கூடுதல் அனுகூலம்

2 mins read
07f64c66-84ce-4fb4-aabe-1171102d6b17
இருப்பில் உள்ள நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்த ஊக்குவிக்க விரிவுபடுத்தப்படும் வரிப் படித்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுமானத்துறை நிறுவனங்களின் முதலாளிகளுக்கு வரிப் படித்தொகை வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தும் கட்டடங்களைக் கட்டும் கட்டுமானத்துறை நிறுவனங்களுக்கு இந்நிதி உதவிக்கரம் நீட்டுகிறது.

தற்போது கூடுதல் கட்டுமானத்துறை திட்டங்கள் இந்த வரிப் படித்தொகைத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படுகின்றன.

மேம்படுத்தப்பட்ட நில வலுவூட்டல் படித்தொகைத் திட்டம் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது.

உற்பத்தி, ஒருங்கிணைப்பு வசதிகளுக்கான அடுக்குமாடி வடிவமைப்பும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

இருப்பில் உள்ள நிலப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்தகவலை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ புதன்கிழமை (ஏப்ரல் 9) அறிவித்தார்.

தற்போது ப்ரீஃபேப்ரிகேஷன் எனப்படும் கட்டுமானத்துக்குத் தேவையான வெவ்வேறு பாகங்களைத் தனித் தனியாக உற்பத்தி செய்து கட்டுமானத் தளத்தில் அவற்றை ஒன்று சேர்க்கும் முறைக்கான நிலையங்களுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுமானத்துறை நிலையங்களுக்கு மட்டுமே இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

திட்டத்தின்கீழ், கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும்போது முதற்கட்ட வரிப் படித்தொகையாக தகுதி பெறும் மூலதனச் செலவினத்தில் 25 விழுக்காட்டுத் தொகை வழங்கப்படும்.

அதன் பிறகு, மொத்த படித்தொகையை எட்டும்வரை தகுதி பெறும் மூலதனச் செலவினத்தில் ஐந்து விழுக்காட்டுத் தொகை வழங்கப்படும்.

விரிவுபடுத்தப்பட்ட வரிப் படித்தொகைத் திட்டம் 2030ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் புதன்கிழமை (ஏப்ரல் 9) தெரிவித்தது.

கட்டுமானம் சார்ந்த உற்பத்தி, பாகங்களை ஒன்று சேர்ப்பது ஆகியவற்றுக்கான வடிவமைப்புகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்க இம்முயற்சி எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு இத்தகைய புதிய வசதிகளை அமைக்கும் நிறுவனங்கள், திட்டமிடல் அனுமதிக்கு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் விரிவாக்கப்படும் திட்டத்துக்கு விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்