ஆய்வு: சிங்கப்பூரில் வெளிநாட்டு நிபுணர்களின் சம்பளம் உயர்வு

ஆய்வு: சிங்கப்பூரில் வெளிநாட்டு நிபுணர்களின் சம்பளம் உயர்வு

1 mins read
73501aec-625b-4d71-9f24-5d3374127745
சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு மேலாளர்களுக்கான சம்பளம் 258,762 அமெரிக்க டாலராக (S$342,904) உயர்ந்துள்ளது.  - கோப்பு படம்: ஸ்டிரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஆலோசனைக் குழுவான ‘இசிஏ இன்டர்நேஷனல்’ நடத்திய ஆய்வின்படி, 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான சம்பளம் 4 விழுக்காடு உயர்ந்துள்ளது.

அதே சமயம் ஹாங்காங்கில் பணிபுரியும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான சம்பளம் 2 விழுக்காடு சரிந்துள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு மேலாளர்களுக்கான சம்பளம் 258,762 அமெரிக்க டாலராக (S$342,904) உயர்ந்துள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடத்திற்கான செலவு உயர்ந்ததே இந்த சம்பள உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

ஹாங்காங்கில் பணிபுரியும் வெளிநாட்டு நிபுணர்களுக்கான சம்பளம் 278,020 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.

சம்பளத்தில் சரிவு இருந்தபோதிலும், வெளிநாட்டு நிபுணர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் ஹாங்காங் ஐந்தாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் 16வது இடத்தில் உள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு நிபுணர்கள் தங்குமிடத்திற்கு ஆகும் செலவு உயர்ந்துள்ளதை உள்ளூர் மக்களாலும் வெளிநாட்டினராலும் உணரமுடிகிறது. இதனால் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகுப்பில் சலுகைகள் அமெரிக்க டாலர் அடிப்படையில் அளவிடப்படும் போது 9 விழுக்காடு உயர்ந்துள்ளது,” என இசிஏ இன்டர்நேஷனலின் ஆசிய வட்டாரத்தின் இயக்குநர் லீ குவான் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்