தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற விவாதங்கள் சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்: சியா கியன் பெங்

2 mins read
d6466846-8eaa-4a49-8e6e-c32de9f3f613
2023ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் 11வது நாடாளுமன்ற நாயகராக திரு சியா கியன் பெங் பதவி வகித்து வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் 15வது நாடாளுமன்றத்தில் கூடுதல் விவாதங்களை சிங்கப்பூரர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பைவிட தற்போது நாடாளுமன்றத்தில் கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதும் உலகில் நிலையற்ற சூழல் நிலவுவதும் சவால்களை எதிர்கொள்ள கூடுதல் கொள்கைகள் தேவைப்படுவதும் இதற்குக் காரணம்.

இருப்பினும், நாடாளுமன்ற அமர்வுகள் கூடுதல் நேரம் எடுக்கும் நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் விவாதங்களின் தரத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் விவாதங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முந்தைய நாடாளுமன்றப் பருவத்தில் கூடுதல் கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பியதை அவர் சுட்டினார்.

ஆனால் கேள்விகள் கேட்க வேண்டும் என்பதற்தாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று அவர் கூறினார்.

அவ்வாறு செய்தால் அது தேவையற்றதாகவும் பலன் அளிக்காததாகவும் அமைந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

ஜூலை 1ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டி அளித்தபோது திரு சியா இக்கருத்துகளை முன்வைத்தார்.

நாடாளுமன்ற நாயகரின் பொறுப்புகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் தாம் கொண்டுள்ள திட்டம் குறித்தும் அவர் பேசினார்.

செப்டம்பர் 5ல் நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது திரு சியாவை மீண்டும் நாடாளுமன்ற நாயகராகத் தேர்வு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜூன் மாதம் 20ஆம் தேதியன்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

2023ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரின் 11வது நாடாளுமன்ற நாயகராக திரு சியா பதவி வகித்து வருகிறார்.

15வது நாடாளுமன்றத்தில் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பர். இதற்கு முன்பு 93 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்கேள்வி