தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்துக்கொண்ட நிபுணர்கள்

10 mins read
58fea0a6-ed42-41d1-8067-20b9d0e4be8c
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பைத் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் 1.7 விழுக்காடாகக் குறைத்துள்ளனர். - படம்: தி பிஸ்னஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பைத் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் 1.7 விழுக்காடாகக் குறைத்துள்ளனர்.

சிங்கப்பூர் பொருளியலில் ஏற்றுமதி முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

எனவே, அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் விளைவுகள் பொருளியல் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

புவிசார் அரசியல் அபாயங்கள், வர்த்தகப் போர் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை அவர்கள் குறைத்துக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் மார்ச் மாதம் நடத்திய காலாண்டு ஆய்வில் பொருளியல் 2.6 விழுக்காடு வளர்ச்சி காணும் என இதற்கு முன்பு அவர்கள் முன்னுரைத்திருந்தனர்.

2024ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

ஏப்ரல் மாதத்தில் வர்த்தக, தொழில் அமைச்சு முன்னுரைத்ததைவிட தனியார் துறை பொருளியல் நிபுணர்களின் தற்போதைய முன்னுரைப்பு குறைவாக உள்ளது.

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து 1.7 விழுக்காடாக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய ஆய்வில் பங்கெடுத்த பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்தனர்.

இவ்வாண்டு சிங்கப்பூரில் பணவீக்கம் மேலும் குறையும் என்று ஆக அண்மைய ஆய்வில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டில் அனைத்துப் பொருள்கள் பணவீக்கத்தின் சராசரி முன்னுரைப்பு 0.9 விழுக்காடாக உள்ளது.

மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இது 1.7 விழுக்காடாக இருந்தது.

தனியார் போக்குவரத்து, வசிப்பிடச் செலவுகள் ஆகியவற்றை சேர்க்காத மூலாதாரப் பணவீக்கத்துக்கான சராசரி முன்னுரைப்பு 0.8 விழுக்காடு.

முந்தைய ஆய்வில் இது 1.5 விழுக்காடாக இருந்தது.

இந்நிலையில், வேலையின்மை அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்வாண்டு வேலையின்மை விகிதம் 2.2 விழுக்காடாகப் பதிவாகும் என்றும் அவர்கள் முன்னுரைத்துள்ளனர்.

மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் இது 2 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்