இளையர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை தீர ஆராய நிபுணர்கள் வலியுறுத்து

இளையர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை தீர ஆராய நிபுணர்கள் வலியுறுத்து

3 mins read
43516fc5-4624-4794-8044-260b99cc9d8b
தனிமை, அடையாளப் போராட்டம் போன்ற காரணங்களால் திரை நேரத்தை இளையர்கள் அதிகமாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இளையர்கள், ஒரு மணி நேரம் சமூக ஊடகங்களில் தகவல்களை தள்ளித் தள்ளி பார்ப்பது பெரிய விவகாரமாக இருக்காது. அதே சமயத்தில் விருப்பக்குறிகளைச் சரிபார்ப்பதற்கும் நேரடி நட்பு வட்டத்திலிருந்து விலகியிருப்பதற்கும் அந்த நேரத்தைப் பயன்படுத்துவது தலையீடு தேவைப்படுவதற்கான அறிகுறிகளாகும்.

இத்தகைய தலையீடுகளில் ஆலோசனை வழங்குதல், சமாளிக்கும் வழிமுறைகளை உருவாக்குதல், தீங்கு விளைவிக்கும் ஊடகத் தள அம்சங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இளையர்களின் மனநலனில் சமூக ஊடகப் பயன்பாட்டின் தாக்கத்தை ஆராய சுகாதார அமைச்சால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழுவில் இந்த நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இக்குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. இதில் சமூக ஊடகங்களுக்கு வயதை அடிப்படையாகக் கொண்டு முழுமையாகத் தடை விதிப்பதற்குப் பதிலாக, இளம் பயனாளர்களை மனநல அபாயங்களுக்கு உட்படுத்தக்கூடிய சமூக ஊடக உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கை, சமூக ஊடகங்களில் சிக்கலான பயன்பாட்டுக்கும் அதிகப்படியான பயன்பாட்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டியது.

இதில் அதிகப்படியான பயன்பாடு என்பது பரவலாக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் என வரையறுக்கப்படுகிறது.

ஓர் இளையரின் வாழ்க்கையில் பிற அம்சங்களில் செயல்படும் திறன் பாதிக்கப்படுகிறதா என்பதே முக்கிய வேறுபடுத்தும் காரணியாகும் என்று குழுவின் உறுப்பினரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வீ தகவல், தொடர்புப் பள்ளியின் உதவிப் பேராசிரியருமான ஆண்ட்ரூ யீ கூறினார்.

சமூக ஊடகங்களில் நண்பர்களுடன் உரையாடுவதற்கும் சமூகத்துடன் இணைவதற்கும் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் செலவிடும் ஓர் இளையர், அவரது பயன்பாடு அதிகப்படியானதாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்று யீ குறிப்பிட்டார்.

அவர்களின் இணையவழி தொடர்புகள் பள்ளியில் உள்ள நட்பு வட்டாரங்களிடையே தொடர்வதாகவும் அவர்களுக்குப் போதுமான தூக்கத்திற்கும் வழக்கமான உணவைப் பெறுவதற்கும் கைப்பேசியை கீழே வைக்க முடியும் பட்சத்தில் இது சாத்தியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திரை நேரத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகள் அதிகப்படியான பயன்பாட்டைக் குறைக்க உதவக்கூடும் என்றாலும், உடற்பயிற்சி/உடலியல் பொழுதுபோக்குகள் போன்ற இணையம் சாரா செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும் நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

மேலும், ஓர் இளையர், சமூக ஊடகங்களில் செலவிடும் ஒரு மணி நேரத்தை விருப்பங்களையும் கருத்துகளையும் விடாப்படியாகச் சரிபார்ப்பதற்கும், தனது சொந்த தோற்றம் குறித்துத் தாழ்வாக உணர்வதற்கும் நேரில் பழகும் நட்புகளிலிருந்து விலகுவதற்கும் பயன்படுத்தினால் அது மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்று யீ சொன்னார்.

இத்தகைய சிக்கலான பயன்பாடு சில நேரங்களில் உணர்ச்சிவசப்படக்கூடிய மன உளைச்சல், தனிமை, அடையாளப் போராட்டங்கள் அல்லது சமூக அங்கீகாரத்திற்கான தீவிரத் தேவையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று மற்றொரு குழு உறுப்பினரும் டச் கம்யூனிட்டி சர்வீசசின் ஆலோசனை, உளவியல் சேவைகளின் மூத்த குழுத் தலைவரும் முதன்மை ஆலோசகருமான ஷான் சோ கூறினார்.

“இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தலையீடுகளில் ஆலோசனை வழங்குதல், சமாளிக்கும் வழிமுறைகளை வலுப்படுத்துதல், உணர்ச்சிவசப்படக்கூடிய நடவடிக்கைகளை மேம்படுத்துதல், அவற்றுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆரோக்கியமான வழிகளை உருவாக்குதல் ஆகியவை உள்ளடங்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரந்த அளவிலான தலையீடுகளில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் அல்லது அதிகப்படியான பயன்பாட்டைத் தூண்டும் அம்சங்களைக் கட்டுப்படுத்த சமூக ஊடகத் தளங்களை வற்புறுத்தும் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதும் அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்
சமூக ஊடகம்இளையர்சுகாதார அமைச்சு

தொடர்புடைய செய்திகள்