தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவுச்சாலையில் தீப்பிடித்த லாரி: சாலையைச் சூழ்ந்த புகை மூட்டம்

1 mins read
56b2be39-6e20-4800-bba1-513a12f7dca6
லாரியில் இருந்து வெளியேறிய கரும்புகை தீவு விரைவுச்சாலை முழுவதும் படர்ந்திருப்பதை ஃபேஸ்புக்கில் வெளியான படத்தில் காண முடிந்தது. - படம்: ஃபேஸ்புக்

தீவு விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது. துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலைக்கு கிளமெண்டி அவென்யூ 6லிருந்து வெளியேறும் சாலைக்கு அருகே இச்சம்பவம் நடந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

வேறு ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியின் மூலம், லாரி தீப்பிடித்தபோது எடுக்கப்பட்ட படம் ஃபேஸ்புக்கில் வெளியானது.

அப்படத்தில், லாரியில் இருந்து வெளியேறிய கரும்புகை தீவு விரைவுச்சாலை முழுவதும் படர்ந்திருப்பதைக் காண முடிந்தது. ச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீச்சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் தீ தானாகவே அணைந்துவிட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்