எஃப்1 பந்தயம்: மரினா சென்டர், பாடாங் பகுதிகளில் சாலைகள் மூடல்

1 mins read
f7573e0e-478a-459e-bc07-b8cd87a7e0b6
கோப்புப்படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டிற்கான எஃப்1 இரவு பந்தயம் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அப்பந்தயத்திற்காக சிங்கப்பூர் தயாராகும் வகையில், செப்டம்பர் 18ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு நகரப் பகுதிகளில் பல சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சாலைகள் செப்டம்பர் 18 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மூடப்பட்டு, செப்டம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு முழுமையாகத் திறக்கப்படும் என்று ஆகஸ்ட் 26ஆம் தேதி (திங்கட்கிழமை) நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

காலையிலும் மாலையிலும் உச்சநேரப் போக்குவரத்தை எளிதாக்க, மூடப்பட்ட சில சாலை வழித்தடங்கள் குறிப்பிட்ட நான்கு நாள்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில் திறக்கப்படும் என அது மேலும் தெரிவித்தது.

ஏழு நாள்களிலும் குறிப்பிட்ட சில மணிநேரங்களில் சில வழித்தடங்கள் வழியாக வாகனவோட்டிகள் மரினா சென்டர் பகுதியை அணுக அனுமதிக்கப்படுவார்கள் என ஆணையம் சொன்னது.

பொதுமக்களும் எஃப் 1 பந்தயத்தைக் காண நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் சாலை மூடப்படும் நாள்களில் மரினா சென்டர், பாடாங் பகுதிகளுக்குப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்