ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் வழங்கிய அடையாள அட்டையை அவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் நடக்கும் மோசடிக் குற்றங்கள் 12 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக இந்தப் புதிய அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, அடையாளத்தை உறுதி செய்யும் அணுகுமுறை குறிப்பிட்ட சில விளம்பரதாரர்களுக்கு மட்டும் உள்துறை அமைச்சு கட்டாயமாக்கியிருந்தது.
2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடப்புக்கு வந்த புதிய மின்வர்த்தகச் சேவை நெறிமுறைகளின்கீழ் /சிங்கப்பூர் பயனர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்க ஃபேஸ்புக், கெரோசல் போன்ற தளங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மோசடி அதிகரிப்பை ஃபேஸ்புக் தளத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எல்று உள்துறை அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 10) கூறியது.
“இவ்வாண்டு ஜூன் மாத இறுதிக்குள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்ய இருக்கும் அனைவரின் அடையாளத்தையும் மேட்டா நிறுவனம் உறுதி செய்ய இருக்கிறது. இதை வரவேற்கிறோம். நிலைமையைக் கண்காணிப்போம்,” என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மின்வர்த்தக மோசடிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த கெரோசலுக்கு மேவும் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறினால் அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து விளம்பரதாரர்களின் அடையாளத்தையும் உறுதி செய்யும் அணுகுமுறை அத்தளத்துக்குக் கட்டாயமாக்கப்படும் என்று உள்துறை அமைச்சு கூறியது.
2024ஆம் ஆண்டில் பதிவான மின்வர்த்தக மோசடிக் குற்றங்களில் 37.4 விழுக்காடு ஃபேஸ்புக் வாயிலாக நடத்தப்பட்டன.
கெரோசல் மூலம் நடத்தப்பட்ட மின்வர்த்தக மோசடிகளின் விகிதம் 17 விழுக்காடாகும்.

