டிக்டாக் தலைமை நிர்வாகி ஒரு சிங்கப்பூரர் - சில சுவையான தகவல்கள்

டிக்டாக் தலைமை நிர்வாகி ஒரு சிங்கப்பூரர் - சில சுவையான தகவல்கள்

1 mins read
366f4cc1-6df8-4770-8958-b15453f00b36
படம்: SHOU.TIME/TIKTOK -

டிக்டாக்கின் தலைமை நிர்வாகி சியூ ஷோ சி ஒரு சிங்கப்பூரர். அவர் வியாழக்கிழமை (மார்ச் 23) அன்று அமெரிக்க வர்த்தகk குழு முன்னிலையில் பேசவுள்ளார்.

டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா ? அதன் எதிர்காலம் என்ன ? அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறதா எனப் பல கேள்விகள் அச்செயலி தொடர்பாக எழுப்பப்பட்டு வருகின்றன.

அதனால் 40 வயது சி மீது அதிகமானோர் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த சியூ ஷோ சி ?

* சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் சி.

* இவரின் தந்தை கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்.

* லண்டனில் பொருளியல் படித்து கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார்.

* 2010ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* அக்காலகட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்தில் உள்ளகப் பயிற்சி பெற்றார்.

* அதன்பின்னர் டிடிஎஸ், சியோமி நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்தார்.

* 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சில் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார்.

* அதே ஆண்டு டிக்டாக்கின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார்.

* இவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

* 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது டிக்டாக் கணக்கைத் தொடங்கினார்.

குறிப்புச் சொற்கள்