தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குறைந்த வருமானத்தினருக்கு ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் சலுகை இரட்டிப்பு

2 mins read
52a2ac9f-42ce-4c7e-ab32-ceae1593e286
நீல நிற, ஆரஞ்சு நிற சாஸ் அட்டைதாரர்களுக்கான விலைச் சலுகை இரட்டிப்பாகிறது. - படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

ஃபேர்பிரைஸ் குழுமம் எஸ்ஜி60 (SG60) கொண்டாட்டத்தை இரட்டிப்பு விலைக் கழிவுடன் தொடங்குகிறது.

சமூக சுகாதார உதவித் திட்டத்திற்கான (Chas) நீல நிற, ஆரஞ்சு நிற அட்டை வைத்திருக்கும் குறைந்த வருமானத்தினருக்கு 2025ஆம் ஆண்டின் முதல் 60 நாள்களுக்கு கூடுதல் விலைக் கழிவுகளை வழங்க இருப்பதாக அந்தக் குழுமம் அறிவித்து உள்ளது.

ஜனவரி 1 முதல் மார்ச் 1 வரை ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் யூனிட்டி மருந்துக் கடைகளிலும் ஒவ்வொரு வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் 6 விழுக்காடு விலைக் கழிவுகள் அவர்களுக்கு வழங்கப்படும்.

அந்த விலைக் கழிவு தற்போது 3 விழுக்காடாக உள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் நபர் ஒன்றுக்கு $1,500க்குக் கீழ் இருப்பின் அவர்கள் நீல நிற ‘சாஸ்’ (Chas) அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல, $1,501 முதல் $2,300 வரையிலான வருமானப் பிரிவில் உள்ளோர் ஆரஞ்சு நிற அட்டைக்குத் தகுதிபெறுவர்.

வரவிருக்கும் 60 நாள்களில், தகுதிபெறும் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே நாளில் செய்யப்படும் பரிவர்த்தனையில் அதிகபட்சமாக $200 வரை விலைக்கழிவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விலைக்கழிவுகளுக்கான நிதியை ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் வழங்கும்.

முன்னதாக, இந்த டிசம்பர் மாதம் ஃபேர்பிரைஸ் குழுமம் வேறோர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

மூத்தோர், முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தோர், நீல, ஆரஞ்சு நிற ‘சாஸ்’ அட்டைதாரர்கள் ஆகியோருக்கான அன்றாட விலைக் கழிவுகளை 2025 இறுதிவரை தொடர இருப்பதாக அது அந்த அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது.

சிங்கப்பூரின் 60வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக 6 விழுக்காடு விலைக்கழிவு வழங்க தமது குழுமம் திட்டமிட்டு இருந்ததாகவும் அது தற்போது நடப்புக்கு வர உள்ளதாகவும் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா தெரிவித்து உள்ளார்.

குறிப்புச் சொற்கள்