தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு ரமலான் மாதம் பானம், சிற்றுண்டி வழங்கும் ஃபேர்பிரைஸ்

2 mins read
238c6714-5950-4b37-99ee-83b65bc6e24b
முஸ்லிம் வாடிக்கையாளர்கள் இஃப்தார் நோன்பு துறப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த பானங்கள், சிற்றுண்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ரமலான் மாத நோன்பை முன்னிட்டு ஃபேர்பிரைஸ் பேரங்காடி தனது 59 நிலையங்களிலும் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு 75,000 பானம், சிற்றுண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்கும்.

இது ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றிக் கூறிய ஃபேர்பிரைஸ், இந்த விழாக்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இது இடம்பெறுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கையிருப்பு இருக்கும் வரை எல்லா முஸ்லிம் வாடிக்கையாளருக்கும் பால், குடிநீர், அல்லது வேறொரு பானத்துடன் பிஸ்கெட் அல்லது பேரீச்சம் பழங்கள் வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் விளக்கியது.

இவற்றை முஸ்லிம் வாடிக்கையாளர்கள் இஃப்தார் நோன்பு துறப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இந்த பானங்கள், சிற்றுண்டிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஃபேர்பிரைஸ் கூறியது.

“ரமலான் மாதம் பிரார்த்தனைக் காலம். இந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்க விரும்புகிறோம்,”

“இந்த முயற்சியின் வழி சமூக நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துவதில் அனைத்து சிங்கப்பூரர்களையும் இணைக்க முற்பட்டுள்ளோம். இதன்மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு நாளும் இனிய பொழுதாக இருக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் ஈடேற செயல்படுகிறோம்,” என்று ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விப்புல் சாவ்லா சொன்னார்.

முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு பானம், சிற்றுண்டி வழங்கும் இந்தத் திட்டத்தில் ஃபேர்பிரைஸ் குழுமம் தனது தலைமையகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்களை இந்த ஆண்டு முதன் முதலாக ஈடுபடுத்த உள்ளது.

குறிப்புச் சொற்கள்