லெங்கோக் பாரு ஃபேர்பிரைஸ் கடை விடைபெறுகிறது

லெங்கோக் பாரு ஃபேர்பிரைஸ் கடை விடைபெறுகிறது

1 mins read
8b8bc548-2c43-4587-8d6b-6b3ab44fa472
லெங்கோக் பாருவில் உள்ள ‘எனேபலிங் வில்லேஜ்’ நடுவத்தில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் காணப்படும் காலியான அடுக்குகள். - படம்: ஸ்டெரெய்ட்ஸ் டைம்ஸ்

லெங்கோக் பாருவில் உள்ள ‘எனேபலிங் வில்லேஜ்’ நடுவத்தில் (இவி) இருக்கும் ஃபேர்பிரைஸ் கடை அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு மூடப்படும்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது இத்தகவலை ஃபேர்பிரைஸ் குழுமம் உறுதிசெய்தது. இருப்பினும் அதற்கான காரணத்தை அது வெளியிடவில்லை.

சிங்கப்பூரில் அதிவிரைவில் அதிகரித்துவரும் மூப்படையும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஃபேர்பிரைஸின் முதல் மற்றும் ஒரே கடை அது.

உடற்குறையுள்ளோர் துடிப்புடனும் பிறர் ஆதரவின்றி வாழவும் ஆதரவு வழங்கும் அந்தக் கடை, 2015ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி, உடற்குறையுள்ளோருக்கான ஒருங்கிணைந்த சமூக இடமான ‘இவி’யுடன் இணைந்து அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

‘இவி’ என்பது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் எஸ்ஜி எனேபலும் இணைந்து அறிமுகப்படுத்திய திட்டமாகும்.

அந்தக் கடை, சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குச் சேவையளிக்கும் என்டியுசியின் சமூகக் குறிக்கோளுக்கு உண்மையாக இருக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று என்டியுசியின் அப்போதைய தலைமை நிர்வாகி சியா கியென் பெங் கூறினார்.

2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் மூத்தோரின் எண்ணிக்கை 900,000க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், 2015இல் 18 வயதுக்கு மேல் உள்ள உடற்குறையுள்ளோரின் எண்ணிக்கை 77,200க்கும் மேல் இருந்ததாலும், சமுதாயத்தின் இந்தப் பிரிவினருக்குப் பொருள்கள் வாங்குவதை மேலும் எளிதாக்க அக்கடை அமைக்கப்பட்டதாக என்டியுசி கூறியது.

வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் அந்தக் கடையின் நுழைவாயிலிலும் நடையோரங்களிலும் அழைப்புப் பொத்தான்களும் பூதக் கண்ணாடிகளும் உள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் அந்தக் கடையின் நுழைவாயிலிலும் நடையோரங்களிலும் அழைப்புப் பொத்தான்களும் பூதக் கண்ணாடிகளும் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்