லிட்டில் இந்தியாவின் தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் செயல்பட்டு வந்த என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி வரும் புதன்கிழமையிலிருந்து (பிப்ரவரி 22) மூடப்படுகிறது.
'சிங்கப்பூர் எட்ரியம் சேல்' பிப்ரவரி 15ஆம் தேதி இச்செய்தியை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த ஃபேர்பிரைஸ் கிளைக்கு வெளியே இதுகுறித்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
அப்பேரங்காடிக்கு வெளியே உள்ள பிஓஎஸ்பி ஏடிஎம் இயந்திரமும் பிப்ரவரி 21 முதல் செயல்படாது என்று 'சிங்கப்பூர் எட்ரியம் சேல்' குறிப்பிட்டது.
அருகிலுள்ள அடுத்த ஃபேர்பிரைஸ் கிளை, ஃபேரர் பார்க்கின் சிட்டி ஸ்குவேர் கடைத்தொகுதியில் அமைந்திருப்பதாக அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேக்கா பிளேஸ் ஃபேர்பிரைஸ் கிளை கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு முன்பு, 2020 மார்ச் மாதம் திறக்கப்பட்டது.
ஜாலான் புசார் குழுத்தொகுதி எம்.பி. டெனிஸ் புவாவின் வலைப்பதிவின்படி, முன்னதாக ரோச்சோரில் இயங்கிவந்த ஃபேர்பிரைஸ் கிளை மூடப்பட்ட பிறகு தேக்கா பிளேசில் ஃபேர்பிரைஸ் கிளை திறக்கப்பட்டது.
நன்றி: mustsharenews


