வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்குகளிலிருந்து மற்றொருவர்க்கு வஞ்சகமாகப் பணமாற்றம் செய்ததன் பேரில் முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் ஜூலை 8ஆம் தேதி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) குற்றம் சாட்டப்படுவார்.
அந்த 43 வயது வங்கி அதிகாரி, வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து அதிகாரமின்றிப் பணமாற்றங்களைச் செய்து பணத்தைக் கையாடியதாகத் தகவல் தங்களுக்கு அக்டோபர் 2019ல் கிடைத்ததாகக் காவல்துறை, ஜூலை 7ல் வெளிவந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
2015 மார்ச் 9ஆம் தேதிக்கும் 2016 ஏப்ரல் 6ஆம் தேதிக்கும் இடையே அந்த ஆடவர், போலியான பணமாற்ற பத்திரங்கள் மூன்றைத் தயாரித்து வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து 600,000 வெள்ளியை மற்றொருவரின் கணக்கிற்கு மாற்றியதாக விசாரணையில்மூலம் தெரிய வந்தது.
மற்றொரு கணக்கை வைத்திருந்தவர், தன் கணக்கிற்கு மாற்றப்பட்ட பணத்திலிருந்து 549,000 வெள்ளியை எடுத்து, பல்வேறு சந்தர்ப்பங்களில் 2015 மார்ச்சுக்கும் 2016 ஏப்ரலுக்கும் இடையே குற்றம் சாட்டப்பட்டவரிடம் தந்ததாகக் கூறப்படுகிறது.
ஏமாற்றும் நோக்கில் கள்ளப்பத்திரம் தயாரித்ததன் பேரில் மூன்று குற்றச்சாட்டுகள் முதலாமவர் மீது சுமத்தப்படும்.
குற்றவியல் செயல் மூலம் சொத்து சேர்த்ததன் பேரில் மூன்று குற்றச்சாட்டுகள் அந்த இரண்டு ஆடவர்கள் மீது சுமத்தப்படும்.

