தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓஃபிர் ரோட்டில் மரம் விழுந்து விபத்து; மூவர் காயம்

1 mins read
1beb7e0b-49c4-480d-9a46-f33dfc0af4df
செப்டம்பர் 21ஆம் தேதி ஓஃபிர் ரோட்டில் மரம் ஒன்று லாரி, கார்மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓஃபிர் ரோட்டில் பெரிய மரம் ஒன்று, ஊழியர்களை ஏற்றிச் செல்லும் லாரி, கார் மீது விழுந்து விபத்தில் மூவர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்த இவ்விபத்தால் அச்சாலையின் ஐந்து வழித்தடங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டது. பலத்த மழைக்கிடையே ஏற்பட்ட இந்த விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்த பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இவ்விபத்து குறித்து மாலை 6.35 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் விபத்து நடந்த இடத்தைச் சென்று பார்த்தபோது சிறிய ரக லாரி ஒன்று மரத்திற்கு அடியில் சிக்கியிருந்தது எனவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பாரந்தூக்கி உதவியுடன், மரத்திற்கு அடியில் சிக்கியிருந்த லாரியின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து ஒருவரை மீட்டு அவரை டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அது கூறியது.

லாரியின் முன்பகுதியில் அமர்ந்திருந்த இருவரும் பின்பகுதியில் அமர்ந்திருந்த மற்றொருவரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் தாமாகவே வாகனத்தைவிட்டு வெளியேறினர். லாரியின் முன்பகுதியிலிருந்து இருவரும் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்துலாரிகாயம்