நவம்பர் மாதத் தொடக்கத்தில், 44 வயது திரு ஆர்வின் ஜியோவானி, தமது இரண்டு பிள்ளைகளையும் முதன்முறையாக பண்டிகை உற்சாகத்தில் ஈடுபட தொண்டூழியம் செய்ய அறிமுகப்படுத்தினார்.
மெரினா ஸ்குவேர் கடைத்தொகுதியில் நடந்த ‘பேர்ஸ் ஃபார் குட்’ (Bears for Good) சாலைக் காட்சியில் பொம்மைக் கரடிகளை வாங்குவதற்காக $50 நன்கொடை அளிக்குமாறு வழிப்போக்கர்களை வற்புறுத்துவதில் அவரும் அவரது குடும்பத்தினரும் நேரத்தைச் செலவிட்டனர். அவரது 40 வயது மனைவி திருமதி குர்பிரீத் கவுர். அவர்களுக்கு ஒன்பது வயது மகள் ஆஷ்லீன் கவுர், ஆறு வயது மகன் ஆர்யன் சிங் உள்ளனர்.
தனியார் வங்கியில் பணிபுரியும் திரு அர்வின், ‘எக்ஸ்ட்ரார்டினரி பீப்பிள்’ (Extraordinary People) அமைப்பில் சுமார் ஒன்றரை ஆண்டுகளாகத் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார். “பிள்ளைகளை ஈடுபடுத்த இது ஒரு சிறந்த நேரம். என் பிள்ளைகள் கருணை, நன்றியுணர்வு போன்ற பண்புகளுடன் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வெற்றி என்பது வெறும் சாதனை மட்டுமல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவையில் இருக்கும் ஒருவரை அடையாளம் கண்டு அவர்களைத் தொடர்புகொள்வதுதான் அது,” என்றும் திரு அரவின் சொன்னார்.
தொண்டூழியம் பற்றிய தவறான கருத்துகள்
குழந்தைப் பருவத்திலிருந்தே தொண்டூழியத்தில் ஈடுபடும் நன்மைகளைப் பெற்றோர்களும் தொண்டு நிறுவனங்களும் பாராட்டினாலும், சில வகையான தொண்டு நிறுவனங்களுக்கு அதிக முதிர்ச்சி மற்றும் உணர்திறன் தேவை என்று சிலர் கருதுகின்றனர். எடுத்துக்காட்டாக, உடற்குறையுள்ளோர் அல்லது மன அல்லது உடல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பணிபுரியும் போது, அவர்களைக் கையாளும் பக்குவம் தேவை எனக் கூறப்படுகிறது.
தொண்டூழியர்கள் லாப நோக்கமற்ற அமைப்புகள் மற்றும் அவற்றின் பயனாளிகளின் தேவைகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறுகிறார்கள்.
“தொண்டூழியம் செய்ய விரும்பும் மாணவர்கள் சில நேரங்களில் சமூகத்தைப் பற்றி தவறான கருத்துகளைக் கொண்டுள்ளனர். நிறைய பிள்ளைகள் இது ஓர் இலவச பூனை சிற்றுண்டியகம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை,” என்று பூனை நலச் சங்கத்தின் தலைவர் திருவாட்டி தேனுகா விஜயகுமார் கூறுகிறார்.
நிதி திரட்டுவதற்கான பொருள்கள் விற்பனை போன்ற நடவடிக்கைகளுக்குத் தொண்டூழியர்களாக 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பதின்ம வயதினரைச் சங்கம் வரவேற்கிறது. ஆனால் அவர்களுடன் ஒரு நம்பகமான பெரியவரும் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“பதின்ம வயது தொண்டூழியர்கள் பெற்றோர் அல்லது வழிகாட்டியுடன் இருக்கும்போது, அவர்கள் மிகவும் சுதந்திரமாக கேள்விகளைக் கேட்க முடியும்,” என்றார் திருவாட்டி தேனுகா.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் பள்ளிகளில் செயல்பாட்டில் மதிப்பீடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவத் தொண்டூழியர்கள் இத்தகைய விற்பனைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தத் திட்டம் மாணவர்களை வலுவான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும் சமூகப் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

