தொடக்கப்பள்ளி ஆசிரியரான திருவாட்டி லின் சியுவெ, 41, இரண்டாவது மகள் அகானாவை ஈன்ற பிறகு மகப்பேற்று விடுப்பிலிருந்தார்.
விடுப்பு முடிந்து பணியில் மீண்டும் சேருவதற்கு முன்னர் கணவர் கார்த்திக் பாலசுப்பிரமணியம், 43, மூன்று வயதாகும் மூத்த மகள் ஆன்யா ஆகியோருடன் ஜப்பானின் ஹொக்காய்டோ வட்டாரத்தில் உள்ள பனிச்சறுக்கு விளையாடும் இடத்திற்குச் சென்றிருந்தார்.
ஆனால் இம்மாதம் 10ஆம் தேதி இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் திருவாட்டி லின்னும் நான்கு மாத இளைய மகள் அகானாவும் உயிரிழந்தனர்.
சீனப் புத்தாண்டுக்கு சிங்கப்பூர் திரும்புவது இக்குடும்பத்தினரின் திட்டம் என்று திருவாட்டி லின்னின் சகோதரர் கூறினார்.

