மாலத்தீவில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் பள்ளிக்கு எதிராக வழக்கு

மாலத்தீவில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் பள்ளிக்கு எதிராக வழக்கு

2 mins read
e7db7f14-baed-44c5-b013-658f0ada0b41
மாணவியை கவனிக்கும் பொறுப்பை பள்ளி தட்டிக்கழிக்க முடியாது என பெற்றோர் கூறுகின்றனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயின்ட் ஜோசப்ஸ் அனைத்துலகப் பள்ளி (எஸ்ஜேஐஐ) மாணவர்கள், மாலத்தீவுக்குக் கல்விச் சுற்றுலா சென்றபோது அங்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். அந்த மாணவியின் குடும்பத்தினர் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பள்ளிமீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 20) வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக அந்தக் குடும்பத்தின் வழக்கறிஞர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் நடைபெற்ற தேசிய இளையர் சாதனையாளர் விருதுக்கான வெளிநாட்டுப் பயணத்தின்போது, அச்சமயத்தில் 15 வயதான ஒன்பதாம் வகுப்பு மாணவி ஜென்னா சான் 2024 நவம்பர் 8ஆம் தேதி உயிரிழந்தார்.

அவர் ‘ஸ்நோர்க்கெலிங்’ எனப்படும் கடலுக்கு அடியில் சுவாசிக்கும் குழாய் கொண்டு நீந்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பின்னால் நகர்ந்துவந்த ஒரு படகின் விசிறியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாலத்தீவு திமிங்கலம், சுறா ஆய்வுத் திட்டம் என்ற வெளிப்புற சேவை நிறுவனம் இந்தச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தது.

ஜென்னாவின் பெற்றோர் ஜெனிபர் லியாவ், ஆலன் சான் ஆகியோர் அந்த மாணவியின் சொத்துகளின் கூட்டு நிர்வாகிகளாக, அவரைச் சார்ந்து இருக்கின்றனர்.

சிங்கப்பூரில் டக்ஸ்டன் ஹில் சேம்பர்சின் ஜெனிஃபர் லிம், நுசா சேம்பர்சின் ஜோனத்தன் முக் மற்றும் பிராவிடென்ஸ் லா ஏசியா ஆகியோர் பெற்றோரை பிரதிநிதிக்கின்றனர்.

பெற்றோர் எவ்வளவு தொகை இழப்பீடாகக் கோருகிறார்கள் என்பதை ஊடக அறிக்கை குறிப்பிடவில்லை.

ஆனால் அந்தத் தொகை $250,000க்கு மேல் இருந்தால் மட்டுமே ஒரு சிவில் வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

ஜென்னா ஒரு குழந்தையாக, பள்ளியின் பொறுப்பில் கட்டாயப் பள்ளி கல்விச் சுற்றுலாவுக்கு அனுப்பப்பட்டதால், எஸ்ஜேஐஐ பள்ளிக்கு ஒரு தவிர்க்க முடியாத கவனிப்புப் பொறுப்பு இருந்தது என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொறுப்பை ஏற்கவைக்கும் மற்ற அனைத்து வழிகளும் தோல்வியடைந்த நிலையில் ஒரு ஓர் இறுதி முயற்சியாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜென்னாவின் பெற்றோர் அந்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அலிஃபு தாலு அட்டோலில் உள்ள திகுரா தீவுக்கு அருகில் கடற்பகுதியில் திமிங்கலம், சுறாக்களைப் பார்ப்பதற்கான பயணத்திற்காக ஜென்னா தண்ணீரில் இறங்கியபோது, பின்னோக்கி வந்த ஒரு படகின் விசிறியால் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சுற்றுப்பயணம், எஸ்ஜேஐஐயின் வெளிப்புறக் கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டாயமானது, அடுத்த கல்வியாண்டில் தேர்ச்சி பெறுவதற்கும் முக்கியமானது.

குறிப்புச் சொற்கள்
பள்ளிசுற்றுலாமாணவர்கள்சுறாமீன்