திறந்தவெளி வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்வாகனங்களுக்கான விரைவு மின்னூட்டிகள்

1 mins read
9fa1e0c6-a64a-4b91-b3de-05e37b552d12
திறந்தவெளி வீவக கார் நிறுத்துமிடங்களில் மின்வாகனங்களுக்கான விரைவு மின்னூட்டிகள் சேவை வழங்குகின்றன. - படம்: CHARGE+

திறந்தவெளி வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) கார் நிறுத்துமிடங்களில் மின்சார வாகனங்களுக்கு வேகமாக மின்னூட்டம் செய்யும் மின்னூட்டிகள் இம்மாதம் முதல் சேவையை வழங்கிவருகின்றன.

சிங்கப்பூரில் அண்மையில் மின்வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அவற்றுக்கு மின்னூட்டம் செய்யப் போதுமான வசதி இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்யும் நோக்கில் பல இடங்களில் மின்னூட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக பிடோக் ரிசர்வோயர், ஹவ்காங், அங் மோ கியோ, பூன் லே ஆகிய வட்டாரங்களில் உள்ள திறந்தவெளி வீவக கார் நிறுத்துமிடங்களில் விரைவு மின்னூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்விடங்களில் வெவ்வேறு வேகங்களில் மின்னூட்டம் செய்யக்கூடிய மின்னூட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆக விரைவான மின்னூட்டியைப் பயன்படுத்தி, 100 கிலோமீட்டர் செல்வதற்கு 10 நிமிடங்கள் மின்னூட்டம் செய்தால் போதும். அடுத்த ஆறு மாதங்களுக்கு மேலும் 14 திறந்தவெளி கார் நிறுத்துமிடங்களில் விரைவு மின்னூட்டிகளைப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பெரும்பாலான வீவக கார் நிறுத்துமிடங்களில் உள்ள மின்னூட்டிகள் மெதுவாக மின்னூட்டம் செய்யக்கூடியவை.

குறிப்புச் சொற்கள்