மியன்மார் பணிப்பெண் வழக்கு: மிகக் குறைவான உடல் எடை குறியீடு

1 mins read
ac6a3250-ba1f-4a3b-9058-85ec12ad6af6
மியன்மார் பணிப்பெண்ணின் முதலாளி, கெல்வின் செல்வம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த மியன்மார் பணிப்பெண்ணின் உடல் எடை குறியீடு (பிஎம்ஐ) புற்றுநோயால் மோசமான நிலையில் உள்ள ஒருவருக்கு அல்லது அதிக அளவில் பரவிய காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உள்ளதைப் போலவே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

24 வயது குமாரி பியாங் ங்காய் டோன்னுக்கு, வலுவிழக்கச் செய்யும் எவ்வித நோயும் இருந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததாகவும் அவரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் பால் நீதிமன்றத்தில் கூறினார்.

பணிப்பெண்ணின் முதலாளியான காவல்துறை அதிகாரி கெவின் செல்வம், 44, நான்கு குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார். குமாரி பியாங்கைக் காயப்படுத்தியது, பட்டினி போட்டு காயப்படுத்த துணை புரிந்தது ஆகியவையும் அவற்றில் அடங்கும்.

அவரின்கீழ் பணிபுரிந்தபோது அந்தப் பணிப்பெண் நீண்டகாலமாக, கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

2015ஆம் ஆண்டு மே மாதம் செல்வத்தின் குடும்பத்துக்குப் பணிபுரிய தொடங்கியபோது பணிப்பெண்ணின் எடை 39 கிலோகிராமாக இருந்தது.

2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி அவர் உயிரிழந்தபோது அவரின் எடை 24 கிலோகிராம் மட்டுமே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்