எம்ஆர்டி நிலையத் தளமேடையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை

எம்ஆர்டி நிலையத் தளமேடையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சண்டை

1 mins read
7db8fbfa-5671-403c-8f8a-df5bfca0fc52
பலரும் சண்டையை வேடிக்கை பார்த்தனர். - படங்கள்: Reddit

ஓர் ஆடவருக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே எம்ஆர்டி நிலையம் ஒன்றில் மூண்ட சண்டையை, கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தது.

சண்டையைக் காட்டும் காணொளி ஒன்று அக்டோபர் 22ஆம் தேதி ‘ரெடிட்’ தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

முதலில், அந்தப் பெண் ஆடவரிடமிருந்து சாவிக்கொத்தைப் பிடுங்கித் தரையில் வீசினார். தமது கைப்பேசியைத் தரச்சொல்லி அவர் கத்துவதைக் காணொளியில் கேட்க முடிந்தது.

பின்னர், அந்த ஆடவர் சற்று முன்னால் வந்து பெண்ணின் முகத்தில் ஓங்கி அடித்தார்.

அதையடுத்து, தமது பையிலிருந்து கைப்பேசி ஒன்றை எடுத்து அதைத் தரையில் வீசினார்.

அந்தப் பெண் ஆடவரின் கையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்த பிறகு நடந்துவிட்டார்.

இந்தக் காணொளியால் இணையவாசிகளிடமிருந்து பலதரப்பட்ட கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே, வேடிக்கை பார்த்த கூட்டம் ஏதோ நாடகத்தைக் கண்டு ரசிப்பதுபோல் சுற்றி வந்ததாகச் சில ரெடிட் பயனாளர்கள் நகைச்சுவை உணர்வுடன் கூறினர்.

இருப்பினும், காணொளியில் இரு நபர்களும் நடந்துகொண்ட விதம் வெகுவாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பொருளை அந்தப் பெண் வீசியிருந்தாலும் அந்த ஆடவர் ஏன் பெண்ணை அறைய வேண்டும் என்று சிலர் சினமுற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்