கேலாங் வட்டாரத்தில் ஆடவர் ஒருவரை ஆயுதம் கொண்டு தாக்கியதற்காக ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அந்த இருவர் மீதும் புதன்கிழமையன்று (ஜனவரி 22) குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த இரு சந்தேக நபருக்கு 48 மற்றும் 61 வயது.
வாக்குவாதம் முற்றிய பிறகு 26 வயது ஆடவரை அவர்கள் உலோகக் கம்பால் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
திங்கட்கிழமை (ஜனவரி 20) காலை சுமார் 7.35 மணி அளவில் கேலாங் லோரோங் 24லிருந்து உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக காவல்துறையினர் கூறினர்.
காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரைத் தாக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் உலோகக் கம்பு சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அது ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இரு சந்தேக நபர்களும் சம்பவ நிகழ்ந்து ஒன்பது மணி நேரத்துக்குள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.