உட்லண்ட்சில் நடந்த சண்டையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட 42 வயது ஆடவர், ஆயுதத்தை வைத்திருந்ததற்காக பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
சுயநினைவுடன் இருந்த அந்த ஆடவர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13, புளோக் 182Aல் நடந்த சண்டை குறித்து நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவுப் பிறகு 12.55 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
டெலிகிராமில் பகிர்ந்துகொள்ளப்பட்ட படங்களில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கு அருகில் உள்ள சாலையில் ரத்தம் கசிந்திருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டது.
அப்படங்களில், காவல்துறை தடுப்பு வேலி, குறைந்தது மூன்று காவல்துறை வாகனங்கள் ஆகியவற்றோடு, நான்கு காவல்துறை அதிகாரிகளையும் பார்க்க முடிந்தது.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை கூறியது.