சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய இளையர் புத்தாக்கத் திட்டம்

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய இளையர் புத்தாக்கத் திட்டம்

2 mins read
d907c685-d657-4ae8-915b-1f785fd32f23
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் உள்ள வருகையாளர்களிடம் பேசுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உயர்நிலை, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கான புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்துள்ளார்.

‘ஸ்டீம்யூனிட்டி’ என்றழைக்கப்படும் அந்த சமுகம் சார்ந்த திட்டத்தை சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் அறிவியல் நிலையமும் கூட்டாக ஏற்பாடு செய்துள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலைகள், கணிதம் ஆகியவற்றை வடிவமைப்புடனும் செயற்கை நுண்ணறிவுடனும் இணைத்து, உண்மையான சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மாணவர்களை ஊக்கப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம்.

கல்வி அமைச்சும் தேசிய ஆய்வு அறநிறுவனமும் அதற்கு ஆதரவு வழங்குகின்றன.

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் திரு ஹெங் பேசினார்.

இளையரிடையே ஆர்வம், புத்தாக்கம், கற்றல், கூட்டு முயற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குத் தாம் கொண்டுள்ள எண்ணத்துடன் அந்தத் திட்டம் ஒத்துப்போவதாக அவர் கூறினார்.

“அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் நமது வாழ்வையும், உலக நாடுகளையும் அறிவார்ந்த வழிகளில் மாற்றி அமைக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங்.

கூடுதலாக, கல்விக் கழகங்கள் செயற்கை நுண்ணறிவு, ‘சாட்ஜிபிடி’ ஆகியவற்றைப் பயன்படுத்திவருவதாகவும் சிங்கப்பூரில் இப்போது அவற்றுக்கு அதிக நாட்டம் உள்ளதாகவும் திரு ஹெங் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ஆர்வத்தை ஏற்படுத்துவது நம் அனைவருக்கும், குறிப்பாக அனைத்து மாணவர்களுக்கும் மிக முக்கியம்,” என்று அவர் சொன்னார்.

சமூகப் பங்காளிகளை ஈடுபடுத்தும் புதிய திட்டம் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது.

முதற்கட்டத்தில், மாணவர்கள் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் வழங்கும் முப்பரிமாண அச்சு போன்ற வடிவமைப்புப் பாடத்திட்டங்களை மேற்கொள்வார்கள்.

நன்றாகச் செயல்படும் குழுக்கள் தங்கள் திட்டத்தைத் தொடர விரும்பினால், இரண்டாம் கட்டத்திற்குச் செல்லலாம். சமூகத்திடமிருந்து கருத்துகளைத் திரட்டுதல், தீர்வுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் செயல்படுதல் ஆகியவை இரண்டாம் கட்டத்தில் இடம்பெறும்.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்திற்கு 27 திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இரண்டாம் கட்டத்திற்கு முன்னேறும் குழுக்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்