ஆண்டுக்கு 4,200 வேலைகளை உருவாக்கிய நிதிச் சேவைத் துறை 4.3% வளர்ச்சி

ஆண்டுக்கு 4,200 வேலைகளை உருவாக்கிய நிதிச் சேவைத் துறை 4.3% வளர்ச்சி

2 mins read
df1db66b-0884-4f3d-98d8-2c4d7207852a
நிதிச் சேவைத் துறை 2024ஆம் ஆண்டு 7.3 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் நிதிச் சேவைகள் துறை கடந்த ஆண்டு 4.3 விழுக்காடு என்னும் குறைவான விகிதத்தில் வளர்ச்சி கண்டது. 2024ல் அந்தத் துறை 7.3 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்தது.

அதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட சராசரி 4.6 விழுக்காட்டு வளர்ச்சியுடன் அது ஒத்திருந்தது.

மத்திய கிழக்கு மோதல், வரி உயர்வு காரணமாக ஏற்பட்ட உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கிடையே அந்த வளர்ச்சி சாத்தியமானது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிச் சேவைகள் பிரிவு 14 விழுக்காட்டை வகிக்கிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சியா டெர் ஜியுன் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் வருடாந்தர அறிக்கையை வெளியிட்டு செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) அவர் பேசினார்.

நிதிச் சேவைத் துறையின் வளர்ச்சி, 2025 வரையிலான ஐந்தாண்டுகளில் வருடாந்தர வளர்ச்சி 4 முதல் 5 விழுக்காடுவரை என்னும் அந்தத் துறையின் இலக்கை அடைய உதவியது.

மேலும், 2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் ஆண்டுக்குச் சராசரியாக 4,200 வேலைகளை அந்தத் துறை உருவாக்கியது. அனைத்து வேலைவாய்ப்புகளும் உள்ளூர் மக்களுக்கே பலனளித்தன.

வங்கி, காப்பீடு, சொத்து நிர்வாகம், அந்நியச் செலாவணி, நிலையான வருமானம், நிலையான நிதி உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டின் வளர்ச்சி பரந்த அளவில் இருந்தது.

அந்த ஆண்டில் வங்கித் துறை சொத்துகள் 3.1 விழுக்காடு வளர்ச்சி கண்டன. அதேபோல, காப்பீட்டு சொத்துகளின் வளர்ச்சி 7.6 விழுக்காடாக உயர்ந்து $493.5 பில்லியன் ஆனது.

குறிப்புச் சொற்கள்