செல்லப்பிராணியின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிய பராமரிப்பாளருக்கு அபராதம்

1 mins read
9fa484bd-f5e0-4f39-9d85-c3a1bc3582be
ஃபெண்டி என்ற கோர்கி ரக நாயின் மரணத்துக்குக் காரணமானவர் என்று செல்லப்பிராணி பராமரிப்பாளர் வென்சா சியு ஒப்புக்கொண்டார். - படம்: @ஹேட்ஸ்ஃபெண்டி/ இன்ஸ்டாகிராம்
செல்லப்பிராணிப் பராமரிப்பாளர் சியு அடுத்த 9 மாதங்களுக்கு விலங்கு தொடர்பான எந்த வர்த்தகத்திலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிப் பராமரிப்பாளர் சியு அடுத்த 9 மாதங்களுக்கு விலங்கு தொடர்பான எந்த வர்த்தகத்திலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் நிலையத்தில் நாய் மாண்டதன் தொடர்பிலான வழக்கில் நிலைய இணை உரிமையாளருக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜூலை 24ஆம் தேதி ஃபென்டி என்ற கோர்கி ரக நாயைப் பராமரித்த வெனசா சியு, 29, நாயின் மரணத்துக்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) அவருக்குத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவர் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு விலங்கு தொடர்பான வர்த்தகங்களை நடத்துவதிலிருந்தும் தடை செய்யப்படுகிறார்.

சிராங்கூன் சென்டரலில் உள்ள ஒரு வீட்டில் பாவ்க்கின் எஸ்ஜி (Pawkin SG) என்ற பராமரிப்பு நிலையத்தை மற்றொரு உரிமையாளருடன் சியு நடத்திவந்தார்.

நாயைக் குளிப்பாட்டிய சியு அதன் கழுத்தில் வாரை மட்டும் கட்டி மேசையில் நிறுத்தியிருந்தார். சியு அதன்பின் மதிய உணவுக்காகச் சென்றபோது நாய் மேசையிலிருந்து விழுந்து கழுத்தில் வார் இறுகி மாண்டது.

நாயை மேசையில் பாதுகாப்பாக நிறுத்திவைக்காமல் சென்ற குற்றச்சாட்டை சியு எதிர்கொண்டார்.

செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது போன்ற விலங்கு தொடர்பான வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளோர் விலங்கு நலனில் அதிக அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்