அதிகாரிக்கு சாபம் விட்டதற்கு அபராதம்

அதிகாரிக்கு சாபம் விட்டதற்கு அபராதம்

2 mins read
95a8ddb5-9e7a-4522-95ad-3b50fb5eadde
சம்பவம் நடந்த உணவங்காடி நிலையம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த ஆண்டின் கொவிட்-19 இரண்டாம் கட்ட தளர்வின்போது, ஐவர் மட்டுமே ஒன்றுகூடல்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் அப்போது இடுமேத்திரா ஆறுமுகம் நியூட்டன் உணவங்காடி நிலையத்தில் 9 பேருடன் ஒன்றுகூடினார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவர்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தனர்.

பாதுகாப்பான தூர இடைவெளித் தூதர்கள் அவர்களிடம் குழுக்களிடையே கலந்துபேச வேண்டாம் என்று கூறியதற்கு ஆவேசமடைந்த அந்நபர் அவர்களைப் பார்த்து சபிக்கத் தொடங்கினார்.

அந்த குற்றத்திற்காக 44 வயது இடுமேத்திரா ஆறுமுகத்திற்கு இன்று (ஜூன் 11ஆம் தேதி) நீதிமன்றத்தில் $6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அனுமதிக்கப்படாத காரணத்திற்கு பிறரை சந்திக்கச் சென்றதற்கும் பாதுகாவல் அதிகாரியின் மீது தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதையும் உள்ளிட்ட குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு நடந்தது.

அப்போது பாதுகாவல் அதிகாரியும் இரண்டு பாதுகாப்பான தூர இடைவெளித் தூதர்கள் கூடிய குழுவினரிடம் விதிமுறைகளை ஆலோசித்தப்போது அவர்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

இரண்டாம் முறை ஆலோசிக்க முயன்றபோது, இடுமேத்திரா ஆத்திரம்கொண்டு தகாத வார்த்தைகளால் அவர்களைத் திட்டினார்.

போலிஸ் அவ்விடத்திற்கு வருவதற்குள்ளாக அக்கூட்டம் கலைந்தது. இடுமேத்திரா கூடியவர்களுடன் அதிக அளவிலான மது அருந்தியிருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறினார்.

கொவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக, அதிகபட்சமாக ஆறு மாத சிறையும், $10,000 அபராதமும் அல்லது இரண்டுமே அவருக்கு தண்டனையாக விதிக்கப்பட்டிருக்கலாம். பொதுச் சேவை ஊழியர் மீது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கு, அதிகபட்சமாக ஓராண்டு சிறையும் $5,000 அபராதமும் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.