ஆயர் ராஜா விரைவுச்சாலையில் தீ

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் தீ

1 mins read
2eb6f421-f650-4219-bef4-ff1dfedd8082
இன்று காலை ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நடந்த தீச் சம்பவம். படம்/செய்தி: ஸ்தோம்ப் -

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் இன்று (ஜூன் 24ஆம் தேதி) ஒரு லாரி தீ பிடித்து எரிந்தது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் உள்ள கிளமெண்டி சாலை வெளிவாயிலுக்கு அருகே நடந்த இந்த தீ சம்பவம் குறித்து, சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு காலை 11.30 மணிக்கு தகவல் வந்தது.

தீப்பற்றிய லாரியின் என்ஜின் பகுதியை தீயணைப்பு வீரர்கள் விரைவில் அணைத்தனர்.

எவரும் இச்சம்பவத்தில் காயம் அடையவில்லை.

தீச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.