கிம் மோ லிங்க் வீட்டில் தீ

கிம் மோ லிங்க் வீட்டில் தீ

படம்: கிறிஸ்டஃபர் டி சூஸா/ஃபேஸ்புக்

16 Aug 2023 - 1:05 pm

1 mins read

கிம் மோ லிங்க் பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் புதன்கிழமை காலை தீ மூண்டது.

ஃபேஸ்புக் பயனர் ‘ஜிஎஃப் பேட்’ பதிவேற்றம் செய்த காணொளிகளிலும் படங்களிலும், அந்த உயர்மாடி வீட்டில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததைக் காணமுடிந்தது.

வீட்டிற்குக் கீழ் உள்ள தெருவில் உடைந்த சன்னல் கண்ணாடிகள் காணப்பட்டன.

மற்றொரு படத்தில் இரண்டு வீடுகளின் உட்புறங்கள் தீயில் கருகியதைப் பார்க்க முடிந்தது. அதன் காரணமாக, தீ இரண்டாவது வீட்டிற்குப் பரவியிருக்கலாம் என்று தெரிகிறது.

இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் டி சூஸாவும் தீச்சம்பவம் தொடர்பான காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்ததாக அவர் கூறினார். அந்தக் காணொளியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் புளோக்கில் நிறுத்தப்பட்டதைக் காண முடிந்தது.

மேல் விவரங்களுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்