வாம்போ ஹைட்ஸ் வீவக புளோக்கில் தீ

வாம்போ ஹைட்ஸ் வீவக புளோக்கில் தீ

2 mins read
effe725b-16e6-43e4-9031-0b2225ca77de
வாம்போ ஹைட்ஸில் வியாழக்கிழமை (மே 29) நிகழ்ந்த தீச் சம்பவத்தில் காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

வாம்போ ஹைட்ஸ் என்னும் ஜாலான் தெந்தராம் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் 22ல் வியாழக்கிழமை (மே 29) தீ மூண்டது.

இது தொடர்பான புகைப்படங்களில் அந்த புளோக்கின் இரண்டாவது, மூன்றாவது தளங்களில் தீ மூண்டு கரும்புகை வானத்தை நோக்கிச் சென்றதைக் காண முடிந்தது.

தீச் சம்பவத்தை அடுத்து காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

இதே புளோக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு தீ மூண்டபோது 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மத்திய தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் வியாழக்கிழமை காலை 11.40 மணிக்கு தீ குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைக்கப் புறப்பட்டதாகவும் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

புளோக்கின் இரண்டாம், மூன்றாம் தளங்களில் வீட்டுக்கு வெளியே இருந்த பொருள்களால் தீ மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த இரண்டு தளங்களில் மூட்ட தீ உள்ளே வீடுகளுக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அருகிலுள்ள வீடுகள் வெப்ப அலை, தீயிலிருந்து கிளம்பிய கரும்புகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தீ காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட 40 பேர் அப்புறப்படுத்தப்பட்டதாகக் குடிமைத் தற்காப்பு படை விளக்கியது.

தீ காரணமாக புகையை சுவாசித்ததால் ஐவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனைகளில் தலா இருவரும் கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நீரைப் பீய்ச்சி அடிக்கும் இரு நீர்க்குழாய்களைக் கொண்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்