புக்கிட் பாஞ்சாங் வீட்டில் தீ; இருவர் மருத்துவமனையில் சேர்ப்பு

புக்கிட் பாஞ்சாங் வீட்டில் தீ; இருவர் மருத்துவமனையில் சேர்ப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Sep 2026 - 7:32 pm

1 mins read

புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பிற்பகலில் தீப்பிடித்தது.

பெண்டிங் சாலை, புளோக் 126ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்துப் பிற்பகல் 3 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புத் தடை தெரிவித்தது.

சம்பவ இடத்தைச் சென்றடைந்த அதன் அதிகாரிகள், ஆறாம் தளத்திலுள்ள அவ்வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டனர்.

அவ்வீட்டின் வரவேற்பறையில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. நீரைப் பீய்ச்சியடித்து தீ அணைக்கப்பட்டது.

வரவேற்பறையில் நினைவற்ற நிலையில் இருந்த ஒருவரைத் தீயணைப்புப் படையினர் மீட்டனர். இதய இயக்க மீட்புச் சிகிச்சை அளிக்கப்பட்டபின் அவர் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

புகையைச் சுவாசித்ததால் அண்டைவீட்டிலிருந்த ஒருவர்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீப்பிடித்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
தீபுக்கிட் பாஞ்சாங்சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைவீடமைப்பு வளர்ச்சிக் கழகம்