தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இரண்டாம் முனையத்தில் உள்ள கழிவறையில் தீ மூண்டதாகத் தகவல்

சாங்கி விமான நிலைய கழிவறையில் தீ

1 mins read
b10aaf14-4dc7-4c06-8839-e93f1718806a
சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள கழிவறையில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் உள்ள கழிவறை ஒன்றில் தீ மூண்டதாகத் தமிழ் முரசு அறிகிறது.

காவல்துறை அதிகாரிகள், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் விமான நிலைய அவசரப் பிரிவுத் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகத் தமிழ் முரசு அறிகிறது.

இரவு 8.40 மணியளவில் மூன்றாம் தளத்தில் உள்ள கழிவறை ஒன்றில் மூண்டதாக நம்பப்படும் தீயை விமான நிலையத் துப்புரவுப் பணியாளர் அணைத்ததாகக் கூறப்படுகிறது.

யாருக்கு எந்தக் காயமும் இல்லை. அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்