காலாங் வட்டாரத்தில், புளோக் 11 அப்பர் பூன் கெங் சாலையில் உள்ள காப்பிக்கடை ஒன்றில் வியாழக்கிழமை (டிசம்பர் 4) அதிகாலை தீ மூண்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்திலிருந்து ஏறத்தாழ 100 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அதிகாலை 12.30 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது காப்பிக்கடையில் இருந்த புகை வெளியேற்றக் குழாய் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.
காப்பிக்கடையில் உள்ள பல உணவுக் கடைகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
புகையைச் சுவாசித்ததற்காக ஒருவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.

