ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா படகு நிறுத்துமிடத்தில் தீ; தீயணைப்பு வீரர் பாதிப்பு

ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா படகு நிறுத்துமிடத்தில் தீ; தீயணைப்பு வீரர் பாதிப்பு

படம்: அகஸ்டின் அங்/ஃபேஸ்புக்

08 Oct 2026 - 7:39 pm

1 mins read

ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் உள்ள படகு நிறுத்தி வைக்குமிடத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) பிற்பகலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தீயினால் அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை பரவியது.

மாலை 3.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. பூங்காவில் உள்ள படகு சேமிப்புக் கிடங்கில் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தன. இரு நீரைப் பீய்ச்சியடிக்கும் கருவிகளைப் பயன்படுத்தித் தீ அணைக்கப்பட்டது.

“தீயணைப்பு நடவடிக்கைக்குப் பிறகு, தீயணைப்பு வீரர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து அடர்ந்த கரும்புகை வானத்தை நோக்கி எழுவதைக் காட்டும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்தீவிபத்துஈஸ்ட் கோஸ்ட்படகு