ஈசூனில் தீச்சம்பவம்; குடியிருப்புக் கட்டடத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஈசூனில் தீச்சம்பவம்; குடியிருப்புக் கட்டடத்திலிருந்து 50க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

படம்: சயீது ஹருண் அல்ஹப்சி/ஃபேஸ்புக்

19 Oct 2026 - 8:08 pm

1 mins read

ஈசூன் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடத்தின் படிக்கட்டில் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பற்றி எரிந்ததைத் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) காலை 9.05 மணியளவில் புளோக் 438 ஈசூன் அவென்யூ 11ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அதற்கு அருகிலிருந்த இரண்டு வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில், கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பொதுத் தாழ்வாரத்திலிருந்து அடர்ந்த கரும்புகை வெளியேறுவதும் பாதிக்கப்பட்ட பகுதியின்கீழ் உள்ள தரைத்தளத்தில் காவல்துறை தடுப்பு போட்டிருந்ததும் தெரிந்தது.

சம்பவத்துக்குப் பிந்தைய நிலவரம் குறித்து நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த நாடாளுமன்றச் செயலாளருமான சயீது ஹரூன் அல்ஹப்சி பகிர்ந்த புகைப்படங்களில், படிக்கட்டுச் சுவர்களிலும் மேற்கூரையிலும் பூசப்பட்டிருந்த சாயம் வெப்பத்தால் சேதமடைந்திருந்ததைக் காண முடிந்தது.

மேலும், பொதுத் தாழ்வாரத்தில் உள்ள மின்விளக்குக்கான மின்சார இணைப்புப் பெட்டியும் கருகியிருந்தது. தீச்சம்பவம் ஏற்பட்டபோது சம்பந்தப்பட்ட தனிநபர் நடமாட்டச் சாதனம் படிக்கட்டுத் தளத்தில் மின்னூட்டப்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்