தேபான் கார்டன்சில் தீ: வீடுகளிலிருந்து 150 பேர் வெளியேற்றம்

தேபான் கார்டன்சில் தீ: வீடுகளிலிருந்து 150 பேர் வெளியேற்றம்

1 mins read
4fce9c05-9ada-40d9-98d1-e25957060ad3
தேபான் கார்டன்சில் உள்ள புளோக் 34ல் தீ மூண்டதை அடுத்து 150 குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.  - படம்: கெஸண்ட்ரா லீ/ ஃபேஸ்புக்

ஜூரோங்கின் தேபான் கார்டன்ஸ் வட்டாரத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து புளோக் 34லிருந்து ஏறக்குறைய 150 பேர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) வெளியேற்றப்பட்டனர்.

மாலை 4.20 மணியளவில் தீச்சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்தை எட்டியபோது 11ஆம் மாடியில் உள்ள வீட்டின் வரவேற்பு அறையில் தீ மூண்டிருந்தது.

புகைக்காடாய் இருந்த வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

“வரவேற்பு அறையில் தீ மூண்டிருந்தது. சம்பவத்தின்போது யாரும் வீட்டிற்குள் இல்லை,” என்று அதிகாரிகள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்பாளர்களை அதிகாரிகள் புளோக்கிலிருந்து வெளியேற்றினர்.

மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் நிலைமையைக் கண்காணித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியதாக வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உருப்பினர் திருவாட்டி கெஸண்ட்ரா லீ ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார்.

தீச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பம் தங்குவதற்குத் தற்காலிக தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்