ஈசூன் புளோக்கில் தீ: 50 பேர் வெளியேற்றம்

ஈசூன் புளோக்கில் தீ: 50 பேர் வெளியேற்றம்

படம்: சையது ஹாருன் அல்ஹாப்சி/ஃபேஸ்புக்

18 Oct 2026 - 9:37 pm

1 mins read

ஈசூனில் உள்ள ஒரு வீவக புளோக்கின் படிக்கட்டுத் தளத்தில் தனிநபர் நடமாட்ட உதவி சாதனம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த புளோக்கில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஈபூன் அவென்யூ 11, புளோக் 438ன் மூன்றாவது மாடியில் நிகழ்ந்த அந்தச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) காலை 9.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்தச் சாதனம் தீப்பிடித்ததன் காரணமாக அருகிலுள்ள இரு புளோக்குகளின் மின்விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாக அந்த வட்டார நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹாருன் அல்ஹாப்சி கூறினார்.

நீ சூன் நகர மன்றத்தின் ஒத்துழைப்பால் பழுதுபார்ப்புப் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக மாலை 4 மணியளவில் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அவர் தெரிவித்தார்.

நீ சூன் குழுத்தொகுதியில் இடம்பெற்றுள்ள நீ சூன் லிங் பிரிவை அவர் பிரதிநிதிக்கிறார்.

மின் விநியோகம் தடைபட்டபோதிலும் மின்தூக்கி இயக்கம் பாதிக்கப்படவில்லை என்றார் திரு சையது.

இதற்கிடையே, தீச்சம்பவத்தால் யாருக்கும் காயமில்லை என்றும் தனிநபர் நாடமாட்ட உதவி சாதனமே தீக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணை தெரிவிப்பதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்